டெல்லி:
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் என்பவர் தாக்குதல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக குற்றவாளிகளுக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய டெல்லி மாணவி நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகள் குடியரசு தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பியிருந்தனர். அவர்கள் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தார். அவர்சார்பாக இது தொடர்பாக வழக்கறிஞர் விருந்தா குரோவர் என்பவர், நீதித்துறை மறுஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றதை தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்வதாக உச்சநீதி மன்றம் கூறியது. இதன் காரணமாக குற்றவாளிகளுக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது மீண்டும் உறுதியாகி உள்ளது. திட்டமிட்டபடி பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.