இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆடம்பர சலுகைகள் தொடர்பாக வன்முறை போராட்டம் வெடித்ததை அடுத்து குறைந்தது 20 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராகப் பொறுப்பேற்ற முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபியாண்டோ-வுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக இது உருவெடுத்தது.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்பப்பெறுவதாக பிரபோவோ சுபியாண்டோ அறிவித்தார்.
ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் துணை ராணுவ போலீஸார் ஒரு இளம் டெலிவரி டிரைவரைக் கொல்வது தொடர்பான வீடியோ வெளியானதால் தீவிரமடைந்தது.
இதனால் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலியானார்கள், இந்த போராட்டம் தொடர்பாக இதுவரை 1240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்தது 20 பேர் காணாமல் போனதாக உறுதியான நிலையில் இது காவல்துறையினருக்கு எதிரான கோபமாக மாறியுள்ளது.