திருப்பதி
திருப்பதி கோவிலுக்கு பாதயாத்றரையாக சென்றவர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது பின்னால் வந்த ஆம்புலன்ஸ் மோதியது. \ரங்கம்பேட்டை-மங்காபுரம் இடையே நிகழ்ந்த இந்த விபத்தில் 2 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.
திருப்பதி காவல் கண்காணிப்பாளர்,
”கடும் பனிப்பொழிவு காரணமாக, டிரைவரின் கண்களுக்கு சாலை சரியாக புலப்படாத நிலையில், விபத்து நிகழ்ந்திருக்கலாம் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், சாலையோரங்களில் விழிப்புடன் சென்று விபத்துகளை தவிர்க்க வேண்டும்”
என அறிவுறுத்தி உள்ளார்.