டெல்லி: ஆஸ்கர் விருது பெற்ற 2 படங்களை சேர்ந்தவர்களும் தென்னிந்தியர்கள் என்பது பெருமையான விஷயம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.

95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில்  சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ என்றம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன. தமிழ்நாட்டில் படமான ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது.  தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

அதுபோல, இசையமைப்பாளர் கீரவாணி இசையில், சந்திரபோஸ் எழுதிய பாடல் இது. ’நாட்டு நாட்டு’ பாடலும் ஆஸ்கர் விருதை தட்டிச்சென்றுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  ஆஸ்கர் விருது பெற்ற 2 படங்களை சேர்ந்தவர்களும் தென்னிந்தியர்கள் என்பது பெருமையான விஷயம் என்று கூறியதுடன்,   இந்த விருதை பெற்றிருப்பதற்கான புகழை மத்திய அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார்.