சென்னை:  தமிழ்நாட்டின் கிழக்கு, மேற்கு என  இருபுறங்களிலும்   இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின்றனர். இதனால்,  தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக,  தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் அக்டோபர் 24-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள வங்கக்கடல்,  மேற்கு பகுதியில்  அரபிக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  ஒரே நேரத்தில்  உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் குமரி முதல் சென்னை வரை  பல  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் 22-ம் தேதியும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும்,  சிலலம் லளிமண்டல சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.

வங்கக்கடலில் 22-ந்தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் அக்டோபர் 24ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது”

இவ்வாறு  தெரிவித்துள்ளது.