ஆகேனக்கல்
பெங்களூருக்கு அருகே நடந்த கோவில் தேரோட்டட்த்தில். தேர் சரிந்து விழுந்து தமிழக பக்தார் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட ஹுஸ்கூருவில் உள்ள மத்தூரம்மா அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருவதையொட்டியொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. 152 அடி உயர தேரில் அம்மன் எழுந்தருளினார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். இந்த அம்மன் தேரை தொடர்ந்து தொட்ட நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் வந்தன. அம்மன் வீற்றிருக்கும் 152 அடி உயர தேர் கட்டஹள்ளி கிராமம் வழியாக வந்து கொண்டிருந்தபோது லேசாக அங்கு மழை பெய்தது. எமவே பக்தர்கள் தேரை மெதுவாக இழுத்து வந்தபோது திடீரென தேர், அப்படியே சாய்ந்து விழுந்தது.
பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடியும் தேரின் அடியில் பெண்கள் உட்பட 11 பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். தேர் விழுந்ததில் சாலையோரம் இருந்த வீடுகளும் சேதம் அடைந்தன. தேரோட்ட பாதுகாப்புக்காக வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தேருக்கு அடியில் சிக்கி காயம் அடைந்த பக்தர்களை மீட்டனர்.
இதில் லோகித்(வயது 24) என்ற தமிழ்கத்தை சேந்த ஆட்டோ டிரைவர் தேரின் அடியில் சிக்கி பலியானது தெரியவந்தது. பெங்களூருவின் கெங்கேரியைச் சேர்ந்த ஜோதி (14) என்பவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த நபர்களை மீட்பு குழுவினர் மீட்டு ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.