பாங்குரா
இன்று அதிகாலை மேற்கு வங்க மாநிலத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மேற்கு வங்க மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதின, இதனால் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு ரயிலில் இருந்த ஓட்டுநருக்கு இந்த விபத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகளை மீட்டு ரயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விபத்துக்குள்ளான இரு ரயில்களும் காலியாக இருந்ததால் சேதம் அதிக அளவில் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த ரயில் விபத்தின் காரணமாக கரக்புர் – பாங்குரா, – ஆக்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.