காபூல்: 
காபூல் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது.  இந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உணவகத்தில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.