மாதிரி புகைப்படம்

சென்னை

ன்று சென்னை சேத்துப்பட்டில் நிகழ்ந்த கட்டுமான விபத்தில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் ஸ்பர்டேங் சாலையில் வேணுகோபால் அவென்யூ உள்ளது.   இங்கு ஒரு புதிய உணவகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.    இன்று இந்த கட்டுமானம் நடைபெறும் இடத்தில் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

உடனடியாக தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்    இந்த விபத்தில் கட்டுமான தொழிலாளர்களில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.  மேலும் விசாரணை நடந்து வருகிறது.

[youtube-feed feed=1]