காரைக்கால்
காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய ஸ்தலமான காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
மேலும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருநள்ளாறு கோவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
எனவே காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு (நாளை மற்றும் நாளை மறுநாள்) 2 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நாட்கள் விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் வரும் 14 மற்றும் 21ம் தேதிகளை வேலை நாட்களாக அறிவித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel