சென்னை

சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒரு குழந்தைக்கு எச் எம் பி வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ (எச்.எம்.பி.வி., HMPV) என்ற தொற்று சீனாவின் பல்வேறு மாகாணங்களில், , வேகமாக பரவி வருவதால்  சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் குவிந்துள்ளனர். எச் எம் பி வி வைரஸ் தொற்றால் பாதிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்தன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எட்டு மாத ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 2 குழந்தைகளுக்கும் தற்போது தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதைபோல் குஜராத்திலும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழகத்திலும் சென்னையில் ஒரு குழந்தைக்கும், சேலத்தில் ஒரு குழந்தைக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இவ்விரு குழந்தைகளின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், அவர்கள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

, சுகாதாரத்துறை,,

“எச்எம்பிவி வைரஸ் காய்ச்சல் நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான். அதனால், யாரும் அச்சப்பட தேவையில்லை. தும்மல், இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்கை மூடுதல், கைகளை கழுவினால் போதுமானது. நெரிசலான இடங்களில் முகமூடி அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்தை நாடலாம்.”

என அறிவித்துள்ளது.