குற்றாலம்
கனமழையால் குற்றாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு 2 பாலங்கள் உடைந்துள்ளன.
வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததன்படி, தென்காசி மாவட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது.
இங்கு நேற்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்ததை தொடர்ந்து பகலிலும் பரவலான மழை விட்டு விட்டு பெய்தது. மாணவ-மாணவிகள் மழையில் குடைபிடித்தும், மழைக்கோட் அணிந்தும் பள்ளிக்கு சென்று மதியத்துக்கு பிறகு பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. பிற்பகல் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகளும் மாற்று தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த . இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2 பாலங்கள் உடைந்தன. கடும் வெள்ளப்பெருக்கால் கோவிலை தாண்டி உள்ள கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. அங்கு யாரும் சென்றுவிடமால் இருக்க காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அங்கு 40 செ.மீக்கு மேல் மழை பதிவாகி உள்ளது.