கவுகாத்தி:
அஸ்ஸாமில் 2 இடங்களில் குண்டுவெடித்துள்ளது

குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம் ஜகுவான் பகுதியில் முதல் குண்டு வெடிப்பு நடந்தது. 2வது தாக்குதல் அஸ்ஸாம்&அருணாச்சல் எல்லைப் பகுதியில் டின்சுகியா மாவட்டத்தின் லிடோ பகுதியில் நடந்தது.
இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசாமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தாக்கதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை.
முன்னதாக குடியரசு தின விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி- அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.
Patrikai.com official YouTube Channel