கைத்தாபூர்

விஜயவாடா – ஐதராபாத் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 2 ஆந்திர டி எஸ் பிக்கள் உயரிழந்துள்ளனர்/

ஆந்திர மாநில உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் டிஎஸ்பிக்கள் சக்ராதர் ராவ் (57), சாந்தாராவ் (54), ஏஎஸ்பி ராம் பிரசாத், கார் ஓட்டுநர் நரசிங்க ராவ் ஆகியோர் பணி நிமித்தம் காரணமாக விஜயவாடாவில் இருந்து காரில் ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

விஜயவாடா – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் யாதாத்ரி மாவட்டம், கைத்தாபூர் எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு வேகமாக வந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி சாலையிலேயே கவிழ்ந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, இவர்களின் கார் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் டிஎஸ்பிக்கள் சக்ராதர் ராவ், சாந்தாராவ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

[youtube-feed feed=1]