பரிமலை

டந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பேர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த 15 ஆம் தேதி மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டு மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது.

ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70,000 பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10,000 பேர் என தினமும் 80,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதனால் பக்தர்கள் நெரிசலின்றி சென்று சாமி தரிசனம் செய்வற்கு உதவியாக இருக்கிறது. தினசரி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக உள்ளதே தவிர அதன்பிறகு கூட்டம் குறைந்து விடுகிறது.

கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர் என தேவசம் போர்ட் தெரிவித்துள்ளது.