புதுடெல்லி :

ந்தியாவில், வாகனங்கள் மோதி இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது; காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஆண்டில் (2019) சைக்கிள் மோதி 195 பேர் பலியானதாக அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு, உ.பி. உள்ளிட்ட 8 மாநில காவல்நிலையங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த ’’டேட்டா’’ தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ‘இந்த டேட்டாவில் உண்மை இருக்காது’’ என மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.

“காவல்துறையில் பணி புரிந்த உயர் அதிகாரிகளும் இந்த டேட்டாவில் கூறப்பட்டுள்ள தகவல் பொய்யானது” என கூறியுள்ளனர்.

“சைக்கிள் மோதி இத்தனை பேர் இறந்திருக்க வாய்ப்பே இல்லை. பாதசாரிகள் மீது சைக்கிள் மோதுவதால் காயம் ஏற்படலாமே தவிர உயிர் இழப்பு என்பது மிகவும் அரிதாகவே நடக்கும்” ‘ என்கிறார், எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து பிரிவு டாக்டர் சுஷ்மா சாகர்.

சாலை பாதுகாப்பு பிரிவில் உயர் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற தென் மாநில அதிகாரி ஒருவர் “போலீசார் கொடுத்துள்ள டேட்டா தவறானது. இதனை மத்திய அரசு , விசாரிக்க வேண்டும். தவறான டேட்டாவை அளிப்பதை விட டேட்டாவை கொடுக்காமலே இருந்திருக்கலாம்” என குறிப்பிட்டார்.

– பா.பாரதி