டெல்லி: மத்தியஅரசு புத்தாண்டு பரிசாக, வணிக சிலிண்டர் விலையில் ரூ.4.50 குறைத்து அறிவித்து உள்ளது. இது வணிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. எனினும், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையொட்டி வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றனர். இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலையை கடந்த நவம்பர் மாதம் மத்தியஅரசு ரூ.101 உயர்த்தியது. அதன்படி இருந்து, ரூ.1,999-ஆக உயர்ந்தது. தொடர்ந்து, டிசம்பர் 1ந்தேதிவணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 காசுகள் உயர்ந்துதது. பின்னர்,. டிச.22ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 2024ம் ஆண்டு ஜனவரி 1ந்தேதி மேலும் ரூ.4.50 குறைத்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.