டெல்லி: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை மேலும் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் சிலிண்டருக்கு ரூ.61.50-ம் தலைநகர் டெல்லியில் ரூ.62ம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், 5 கிலோ இலவச வர்த்தக எல்பிஜி (எஃப்டிஎல்) சிலிண்டர்கள் ரூ.15 அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் இந்திய பணத்தின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் கியாஸ் விலைகளை நிர்ணயித்து வருகின்றனர். சர்வதேச சந்தைக்கு ஏற்பட்ட தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்து வருகிறது. கியாஸ் சிலிண்டர்கள் விலை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நவம்பர் 1ந்தேதி முன்னிட்டு, இதுவரை இதன் விலை, ரூ.1740ஆக இருந்து வந்த நிலையில், இன்று ரூ.62 வரை உயர்ந்துள்ளது. சென்னையில், ஒரு சிலிண்டருக்கு ரூ. 61.50அதிகரித்து 1964.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.62 உயர்ந்து,ரூ.1,802 ஆக உள்ளது.
அதேவேளையில், 5 கிலோ இலவச வர்த்தக எல்பிஜி (எஃப்டிஎல்) சிலிண்டர்கள் ரூ. 12 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் கடந்த பல மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது. சிலிண்டர் விலையில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் இருக்கும்.
14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.