இஸ்தான்புல்
துருக்கிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 பேர் கைது  செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
டெமிரோரன் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்தான்புல் நகராட்சி காவல்துறையினர்  நகரத்தின் ஐரோப்பியப் பக்கத்தில் சுல்தங்காசி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த ஒரு வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.
வாகனங்களுக்குள் சட்டவிரோதமாகத் துருக்கிக்குள் நுழைய முயரவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவர்களைப் பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இஸ்தான்புல்லிலிருந்து சுமார் 240 கிமீ தொலைவில் உள்ள வடமேற்கு எல்லை மாகாணமான எடிர்னேவுக்கு சென்று கிரேக்கத்திற்குச் செல்ல முயற்சி  செய்ததாக கூறப்படுகிறது.
ஐரோப்பாவிற்குச் செல்லும் முக்கிய போக்குவரத்துப் புள்ளியான துருக்கி, கடந்த மாதம் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை அதிகரித்து வருகிறது.