லக்னோ
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தினால் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் மட்டும் ஒரேநாளில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
உத்தரப்பிரதேச கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 600க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை, வெள்ளம், மின்னல் தாக்கி அம்மாநிலத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு நிவாரண பணிகள வேகமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]