அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி சூடு 19 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பலி…

Must read

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 வயது கூட நிரம்பாத 19 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த 18 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் 2 ஆசிரியர்கள் மற்றும் 19 மாணவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2012 ம் ஆண்டுக்குப் பின் பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பள்ளியின் ஒரே அறையில் இருந்த மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து இறந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது அதேவேளையில், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என்ற குரல் மீண்டும் அதிகரித்துள்ளது.

More articles

Latest article