திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை மறுநாள் (16ந்தேதி) காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18-ம் தேதி நடைபெறுகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் 2வது வீடாக திகழ்வது திருச்செந்தூர். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர் சோலை ஆகிய அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடற்கரை கோவிலாக உள்ளது. உலகம் முழுவதும் எத்தனை முருகன் கோவில்கள் இருந்தாலும் குறிப்பிட்ட அறுபடை கோவில்கள் எனப்படும் இந்த ஆறு கோவில்கள் மட்டுமே வெகுசிறப்பு வாய்ந்தது. அதிலும் சூரனை வதம் செய்த செந்தூர் புகழ்பெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நடப்பாண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை மறுநாள் (13-ம் தேதி) காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.
கந்த சஷ்டி விழா வரும் தொடங்கும் 13-ம் தேதி தொடங்கும் அன்று அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்குஉதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.
பின்னர் 5-ம்நாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.
தினமும் பகல் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலியபாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தீபாராதனையும் நடைபெறும்.
மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
கந்த சஷ்டி விழாவின் சிறப்பு அம்சமான சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் கடற்கரையில் வரும் 18-ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. எம்பெருமான் ஜெயந்திநாதர் (முருகன்) சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருள்வார். அங்கு சூரனை வதம் செய்தார். இந்த சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறும்.
பின்னர் கிரிப்பிரகாரம் வந்து,திருக்கோயில் சேர்தல் நடைபெறும். இரவு 108 மகாதேவர் சந்நிதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் முடிவுற்ற பின்னர், பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடைபெறும்.
வரும் 19-ம் தேதி காலை 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சுவாமி காட்சிகொடுத்து, மாலை மாற்றுதல், இரவு திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன.
விழாவையொட்டி, விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு உள்ளது., கடற்கரையில் மணலை சமன்செய்து, தடுப்புகள், தற்காலிக கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம்அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு உள்ளன,
கந்த சஷ்டி விழாவையொட்டி, மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 13-ம் தேதி கந்த சஷ்டி விழாவுக்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோயிலில் ஏராளமான பெண் பக்தர்கள் இரவில் தங்குவதால், உரிய பாதுகாப்பு அளிப்பதுகுறித்தும், அடிப்படை வசதிகள் செய்வது குறித்தும் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.