புதுடெல்லி:
மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு நேரடியாக “கோவாக்சின்” சப்ளை செய்யப்படுகிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி (Corona Vaccine) போடப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஆக்ஸ்போர்டு ஈஸ்ட்ரோஜெனாவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் ரஷ்யாவின் புளூட்டோனிக் ஆகிய மூன்று தடுப்பூசிகள் உள்ளன. புளூட்டோனிக் இறக்குமதி மே 1 முதல் தொடங்கப்பட்டு உள்ளது. கோவிஷீல்ட் இந்தியாவில் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசியின் முதல் கட்டத்தில், சர்க்கரை, பிபி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 60 வயது முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதே நேரத்தில், இரண்டாம் கட்டத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கியது.

இந்நிலையில், மே 1 முதல் 18 மாநிலங்களுக்கு நேரடியாக “கோவாக்சின்” சப்ளை செய்யப்படுகிறது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.