கெய்ரோ:

எகிப்து நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய  கண்ணிவெடி  தாக்குதலில் 18 போலீசார் பலியாயினர்.

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தின் ஆரிஷ் நகர் அருகே போலீசார் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சென்ற பாதையில் புதைத்து வைத்திருந்த கன்னி வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில் போலீசாரின் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.

இதில் 18 போலீசார் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்ர். 8 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எகிப்தில் முகமது முர்சியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்ததையடுத்து, பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஏராளமான ராணுவ வீரர்களும், போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகளில் 3 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த இடத்தில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.