சென்னை:  சென்ட்ரல்  கும்மிடிபூண்டி வழித்தடத்தில் இன்று 18 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இன்று மகாவீர் ஜெயந்தியையொட்டி, அரசு விடுமுறை  விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தண்டவளா பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி இடையேயான மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  பொன்னேரி-கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக,  இன்று முதல் 12ஆம் தேதி வரை, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 18 மின்சார ரெயில்கள்  ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் 12ஆம் தேதி வரை பொன்னேரி-கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 2 ரெயில்கள் சென்னை பீச் வரை தான் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.