டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 11,919 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன்,  11,242 பேர் குணமடைந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,919 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,78,517 ஆக உயர்ந்தது.

நேற்று ஒரேநாளில், கொரோனா தொற்றுக்கு  மேலும் 470 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம்  நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,64,623 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று  ஒரே நாளில் 11,919 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,85,132 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.28% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,28,762 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.37% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 73,44,739 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்

ளது.  இதுவரை  1,14,46,32,851 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 12,32,505 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதுவரை 62,82,48,841* சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.