சென்னை:
கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசு மற்றும் நீதி மன்றத்தின் எச்சரிக்கை மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ள எதிர்ப்பு காரணமாக, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தின் காரணமாக, இன்று பள்ளிக்கு வராத 2,710 ஆசிரியர்களுக்கு 17பி வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், விளக்க கடிதம் கொடுத்தாலும், அவர்கள் தற்போது பணி யாற்றும் பள்ளிகளில் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்றும், அவர்கள் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
17பி நோட்டீஸ் பெற்றவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுட்டிக்காட்டும் பள்ளியில்தான் தங்களது பணியை தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]