இந்தியாவில் மின்னல் தாக்கி உயிர் இழப்பவர்கள் குறித்து ஆண்டு தோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையிலான நிதி ஆண்டில் மின்னல் தாக்கி உயிர் இழந்தவர்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓரண்டு காலத்தில் ஆயிரத்து 771 பேர் மின்னல் தாக்கி மரணம் அடைந்துள்ளனர்.
அதிக பட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 293 பேர் மின்னலுக்கு பலியாகி உள்ளனர்.
மழை பெய்யும் போது மரத்துக்கு அடியில் நிற்பவர்களே பெரும்பாலும் மின்னல் தாக்கி உயிர் இழக்க நேரிடுவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் மின்னல் தாக்கி மரணம் அடைவோரில் 70 சதவீதம் பேர் மரத்தின் அடியில் நிற்பதால் உயிர் இழக்க நேரிடுவதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
– பா. பாரதி