திருச்சி:
அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுக்கள் எண்ணப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளார்.
அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறை சிறியதாக இருப்பதால், வேறு இடத்துக்கு வாக்கு எண்ணிக்யை மாற்ற வேண்டும் என் தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்திருந்றதார். அப்போது, வாக்கு எண்ணிக்கைக்காக இரண்டு அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டு அறைகளில் ஆயிரம் பேருக்கு மேல் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இடநெருக்கடி உண்டாகும். வாக்கு எண்ணும் போது சிரமங்கள் ஏற்படும். அரங்கம் போன்ற பெரிய இடத்திற்கு வாக்கு எண்ணிக்கையை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். ஆனால் வாக்கு எண்ணும் இடத்தை மாற்ற முடியாது என ஆட்சியர் தெரிவித்து விட்டார் என்றுகூறினார்.
இந்த நிலையில், இடத்தை மாற்றுவதற்கு பதிலாக வாக்கு எண்ணிக்கைக்கு போடப்பட்டிருந்த 14 டேபிள்கள் 8 ஆக குறைத்து தேரதல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இட நெருக்கடியை காரணம் காட்டி மேஜைகள் குறைக்கப்பட்டதால் 17 சுற்று வாக்குகள் எண்ணுவதற்கு பதில் 32 சுற்றுகள் வாக்கு எண்ணும் நிலை ஏற்பட்டது
இதையடுத்து, . 8ஆக குறைக்கப்பட்ட டேபிள்களை 14ஆக அதிகரிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டு உள்ளார். பெரிய ஹாலில் அதே 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.