சென்னை: தமிழகத்தில் நேற்று புதியதாக 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. அவர்களில் 205 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட தகவலினிபடி, தமிழகத்தில் இதுவரை 25,90,632 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல, நேற்று 28 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்தையடுத்து, இதுவரை 34,519 பேர் கொரோனா தொற்றால் உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில் தொற்றில் இருந்து குணமடைவோர் அதிகரித்து வருகின்றனர். நேற்று 1,911 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 25,35,715 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 20,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநில தலைநகர் சென்னையில், நேற்று 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,41,402 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 4 பேர் உயிர் இழந்துள்ளதுடன். இதுவரை 8,363 பேர் மரணம் அடைந்துள்ளனர். 235 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,30,959 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 2,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
16.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 35,15,561 பேருக்கும், 16.08.2021 அன்று 24,454 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: