இந்தியாவில் எந்த மாநிலத்திலும் போலீசாருக்கு வார விடுமுறை கிடையாது. இந்த நிலையில் புதுவையில் முதல் முறையாக பீட் (ரோந்து) போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கவர்னர் கிரண்பேடி வெளியிட்டார்.
வீடுகளில் கழிவறை இல்லாவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடையாது: சட்டீஸ்கர் அரசு அதிரடி
மக்கள் பாதுகாப்பு கழக தலைவரும் சமூக ஆர்வலருமான டிராபிக் ராமசாமி, மதுரையில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களை போக்குவரத்து போலீசாரின் உதவியுடன் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திருமானிகுழி கெடிலம் ஆற்றில் குளித்த 8-ம் வகுப்பு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆற்றில் மணல் எடுக்கப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் குளித்தபோது மாணவர் சிவா உயிரிழந்துள்ளார்.
கரூர் அருகே பகல் நேரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
குன்னூர் அருகே கோடநாடு தேயிலை எஸ்டேட்டில் டிராக்டர் கவிழ்ந்து 35 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில் சங்குதுறையில் கடலில் மூழ்கி திருப்பூரைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். கடலோரத்தில் நின்றுகொண்டிருந்த அமீர்-பாத்திமா தம்பதியை சீறிவந்த அலை இழுத்துச் சென்றது. இருவரின் உடலும் கைப்பற்றப்பட்ட நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டுவில் தொழிலதிபர் கோவிந்தச்சார்யாவிடம் பணிபுரிந்த கார் ஓட்டுநர் ஜோசப் போலீசில் சிக்கினார். ரூ.2 கோடி மதிப்பு நகை, பணம் கொள்ளை அடித்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட வீரப்பனின் அண்ணன் மாதையன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கர்நாடக சிறையில் 7 வருடங்களும், சேலம் சிறையில் 21 ஆண்டுகளும் சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.வயது 70ஐ தாண்டிவிட்டதால், கடைசிக் காலத்தில் குடும்பத்தினருடன் வாழ ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.எனவே தன்னை விடுவிக்கும்படி மாவட்ட முதன்மை நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளார்.
பச்சிளம் பெண் குழந்தையை நாய்களுக்கு உணவாக்கிய
சென்னை தாம்பரம் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த நேபாள பெற்றோர் கைது!
விநியோக அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5000 டாலர் தருமாம் அமேசான் நிறுவனம்.இந்த பணத்தை பெற்றுக்கொண்டு, வேலையை விட்டு போக விரும்புவோர் போய் விடலாம். ஆண்டுதோறும் 2 முதல் 3 சதவீத ஊழியர்கள் இந்த டாலர் ஆஃபரை எடுத்துக்கொண்டு வெளியேறுவார்களாம்.
சுவாதி கொலை வழக்கில், ராம்குமாரின் விசாரணையுடன் இன்னும் 15 நாட்களில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது காவல்துறை.ராம்குமாருக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித் தரும் அளவுக்கு ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன.சுவாதியின் நண்பர் பிலால், தந்தை மற்றும் கொலையை நேரில் பார்த்தவர் என 3 முக்கிய வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.
வங்கிகளிடம் வாங்கிய ₹70 ஆயிரம் கோடியை கட்டாமல் உள்ளனர் ஏழாயிரம் தொழிலதிபர்கள்.இவர்களின் பெயர் பட்டியலை விரைவில் வெளியிடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.