மும்பை:

காராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், உத்தவ் தாக்கரே அரசு அமோக வெற்றி பெற்றது. அவரது அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் ஆதரவு அளித்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா தலைமையிலான மகா அகாதி விகாஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

இது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளி நடப்பு செய்தனர். அதன்பிறகு சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.

இதில், உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக 169 வாக்குகள் பதிவானது. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே வெற்றி பெற்றுவிட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு, சிவசேனா கட்சியின்  56 உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் – 54 உறுப்பினர்கள், காங்கிரஸ் – 44 உறுப்பினர்கள் உடன்   பிற கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.