நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவி
அமெரிக்கா.. அதோட நிலைமை இவ்ளோதான்….
“242 ஆண்டுகால ஆட்சி வரலாற்றில் அமெரிக்கா அமைதியை அனுபவித்தது வெறும் 16 ஆண்டுகள் தான்.. மற்றபடி போர் போர் என எப்போதும் போர் நடத்திக் கொண்டிருக்கிற நாடாகவே அமெரிக்கா இருக்கிறது..
ராணுவத்திற்காக ட்ரில்லியன் கணக்கில் செலவழித்து கொண்டிருக்கிறோம்.. இவற்றை யெல்லாம் சாலைகள் பாலங்கள் ரயில் போக்குவரத்து என உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்திருந்தால், இன்று நாம் வளர்ச்சியில் எங்கேயோ போயிருப்போம்.
ஆனால் சைனாவைப் பாருங்கள் 1979 பிறகு போரை அந்நாடு முற்றிலுமாக தவிர்த்துள்ளது. போருக்கு செலவழிப்பதை விட அந்நாடு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது..
பாலங்கள், அணைகள், புல்லட் ரயில்கள் என அவர்கள் நம்மைவிட வளர்ச்சியில் எங்கேயோ போய் விட்டார்கள்…”
– இப்படி சகட்டுமேனிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை் பார்த்து கடந்தாண்டு கழுவி ஊற்றியவர் வேறு யாருமல்ல அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர்தான்
ஆனால் அமெரிக்க அதிபர்களின் புத்தி மாறவே இல்லை. அதுவும் அதிபர் தேர்தல் வரப்போகிறது என்றால் சும்மா இருப்பார்களா? இதோ ஈரானுட னான சண்டையிட்டு ஆரம்பித்துவிட்டார்கள்…
ஊரையே பயமுறுத்தி உலையில் போடும் ரவுடிகள் தாதாக்கள் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் அனைவருக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு..
எவனுமே தினமும் நிம்மதியாக சாப்பிட முடியாது நிம்மதியா தூங்க முடியாது.. அவ்வளவு ஏன் பாதுகாப்பு இல்லாமல் வெளியே சர்வ சாதாரணமாக சுதந்திரமாய் சுற்றக் கூட முடியாது..எப்போ எவன் எந்த பழியை தீர்த்துக்கொள்வதற்காக போட்டுத்தள்ளுவானோ என்ற பயமே இதற்கெல்லாம் காரணம்..
உலகம் முழுவதும் சுற்றுலா செல்லும் ஒவ்வொரு அமெரிக்கனின் மனதிலும் இந்த பயம் இல்லாமல் இருக்குமா என்பது சந்தேகமே? நாட்டுத் தலைவர்கள் செய்யும் அராஜகங்கள் அப்பாவி குடிமகன்கள் தலையில்தானே விடியும்..
யோசித்து பார்த்தால், எப்போதும் போர் போர் என கத்தும் அமெரிக்காவின் நிலையும். வெளியே உதார்விட்டு விட்டு உள்ளுக்குள் பயந்து நடுங்கும் உள்ளூர் ரவுடியின் நிலையும் ஒன்றுதான்..
வெளிநாட்டை காட்டி காட்டி பயமுறுத்தியே அரசியல் பிழைப்பு நடத்துற தலைவர்கள் இருக்கும்வரை, அவர்கள் நாட்டின் முன்னேற்றம் சைபர்தான்..