இஸ்ரேல்:
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு நடத்திய போராட்டகாரர்கள் மீது இஸ்ரேல் படையினரின் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பாலஸ்தீன – இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் என்ற அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நேற்று காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரணியாக செல்ல முயன்றனர்.
அப்போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த இஸ்ரேல் படையினருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போராட்டக்காரர்களும் இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பாலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை குறி வைத்து இஸ்ரேல் படையினர் குண்டுகள் வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக. இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாக கூறப்படுகிறது. தற்போது காசா பகுதி பதற்றமாக இருந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகினற்ன.