காசர்கோடு:  கேரள மாநிலம் காசர்கோட்டில் கோயில் தெய்யத்  திருவிழாவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரில் அமைந்துள்ளது அஞ்சுதம்பலம் வீரர்காவு கோவில். இங்கு வருடாந்திர  தெய்யத் திருவிழா நடைபெற்று வருகிறது.  இந்த திருவிழாவையொட்டி,  வான வேடிக்கை நடத்தப்படுவது வழக்கம்.  அதன்படி, வான வேடிக்கைக்காக ஏராளமான பட்டாசுகள்  குடோனில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  நேற்று நள்ளிரவு திடீரென பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து சரமாறியாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால்  அங்கிருந்தோர் சிதறி ஓடினர். ஆனால், பட்டாசுகள் அடுத்தடுத்து சீறி பாய்ந்ததால்,  சுமார் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் களமிறங்கிய நிலையில், மற்றொரு தரப்பினர் தீக்காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதில் 8 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விசாரணையில், கோவில் திருவிழாவுக்காக பட்டாசு வெடிக்க ல் வைக்கப்பட்டிருந்த அறையில் உள்ள   பட்டாசுகளில் தீப்பற்றியுள்ளதே  காரணம் என கூறப்படுகிறது. ஆனால், இந்த தீவிபத்து மின்சாரம் காரணமாக நடைபெற்றதா அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தார்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல, கோவில் நிர்வாகத்தினர், முறையான காவல்துறை அனுமதியின்றி,   பட்டாசுகள் வெடிக்க அவற்றை வாங்கி பதுக்கி வைத்திருந்ததும் தெரிய

வந்துள்ளது.