டேராடூன்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத நிறுவனங்களின் நிதியில் இருந்து 80% வழங்க உத்தரவு இடுமாறு பிரதமர் மோடிக்கு ஒரு 15 வயது சிறுவன் கடிதம் எழுதி உள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனாவால் கடும் அச்சம் அடைந்துள்ளது.  இந்தியாவில் தேசிய ஊரடங்கு மூலம் மக்களைச் சமுதாய இடைவெளியைப் பின்பற்ற வைத்து கொரோனா தடுப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் அதிகமான மக்கள் தொகையால் இந்த முறை பல்கீனமடைந்து வருகிறது.

டேராடூனை சேர்ந்த 15 வயது சிறுவன் அபினவ் வர்மா இங்குள்ள செயிண்ட் ஜோசப் அகாடமியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருடைய தாய் தந்தை இருவரும் மருத்துவர்கள் என்பதால் அபினவ் கொரோனா குறித்து அந்த வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியது முதல் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்துள்ளார்.

அபினவ் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதமொன்றை எழுதி உள்ளார்.  அபினவ் சமகால இளைஞர்களைப் போல்  முகநூல் அல்லது டிவிட்டர் மூலம் இந்த கடிதத்தை மோடிக்கு அனுப்பாமல்  அவருடைய இ மெயில் ஐடிக்கு அனுப்பி உள்ளார்.  அவருடைய கடிதம் தற்போது வெளியாகி ஒவ்வொருவரும் அபினவ் க்கு புகழ்மாலை சூட்டி வருகின்றனர்.

அபினவ் தனது கடிதத்தில்,

மதிப்பிற்குரிய ஐயா,

நாம் அனைவரும் 130 கோடி இந்தியர்கள் முழு அடைப்பில் உள்ளதையும் கொரோனா பாதிப்புக்கு எந்த மருந்தும் கிடையாது என்பதையும் அறிவோம். நீங்கள் மக்களின் கைகளைக் கட்டி  வீட்டை விட்டு வரக்கூடாது என்பதை நான் காண்கிறேன்.  உலகில் கொரோனாவுகு மருந்து கண்டுபிடிக்காததால் நாம் சமுதாய இடைவெளியை நெடுங்காலத்துக்கு கடைப்பிடிக்க  வேண்டும்.   

இந்த அவசர நிலையால் லட்சக்கணக்கான வெளியூர் தொழிலாளர்கள்,பிச்சைக்காரர்கள், வீடற்றோர் தினக்கூலி தொழிலாளர்கள்,அனைவரும் ஒரே நாளில் பணி இழந்துள்ளனர். இதனால் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. சிறு தொழிற்சாலைகள், வர்த்தகங்கள், தொழில்கள் மூடப்பட்டதால் வேலை இன்மை அதிகரிக்கும்.

மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருவதால் அரசின் நிதி விரைவில் காலி ஆகி விடும் .  எனவே நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.  அனைத்து மத அமைப்புக்களும் தங்களிடம் உள்ள கடவுளின் செல்வத்தில் இருந்து 80% பங்கை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனச் சட்டம் இடுங்கள்.   கடவுளின் குழந்தைகளுக்கு தனது பணம் செலவழிவதில் கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நம்மை ஆசிர்வதிப்பார்.  நான் அனைவரும் மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொள்வோம்.” 

என எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தின் நகல்களை அவர் பகவான், அல்லா, வாலேகுருஜி, ஜீசஸ் ஆகியோருக்கு அனுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.