டில்லி

மே மாத ஜி எஸ் டி வசூல் 15% குறைந்து ரூ.1.40 லட்சம் கோடி ஆகி உள்ளது.

ஜி எஸ் டி வசூல் குறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கையில்,

இந்த வருடம் மே மாதம் ரூ.1,40,885 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. ஏப்ரலில் வசூலான தொகையை விட இது 15% (ரூ.1.68 லட்சம் கோடி) குறைவாகும்.   ஆயினும் கடந்த 2021 மே மாதம் வசூலான தொகையுடன் ஒப்பிடுகையில் இது 44 சதவீதம் கூடுதலாகும்.  அப்போது வசூலான தொகை ரூ.97,821 கோடியாகும்.

மத்திய ஜிஎஸ்டி ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.73,345 கோடியும் வசூலாகியுள்ளது.  இவற்றில் இறக்குமதி பொருள்கள் மீதான வரிவிதிப்பு மூலம் வசூலான ரூ.37,469 கோடியும், செஸ் ரூ.10,502 கோடியும் அடங்கும்.

மேமாதம் இறக்குமதி பொருள்கள் மீதான வரி வசூல் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. தவிர இறக்குமதி சேவை மூலமான வரி வசூல் 44 சதவீதம் அதிகரித்துள்ளது’’ 

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.