பெங்களூரு: 

ர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களில் 15 பேர் இன்று முதல் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

கா்நாடக காங்கிரஸ், மதச்சாா்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிகளைச் சோந்த 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக கொறடா உத்தரவை மீறி, குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கலந்துகொள்ளாததால், அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவி, கட்சித்தாவல் தடை சட்டப்படி நீக்கப்பட்டது. சபாநாயகர் ரமேஷ்குமார், அவர்கள் 17 பேரையும் தகுதி இழப்பு செய்வதாக அறிவித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும்,  சட்டப்பேரவைத் தலைவா் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததுடன், அவா்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட எவ்வித தடையுமில்லை என்றும் தெரிவித்தது.

இதற்கிடையில், எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், காலியான 17 தொகுதிகளில் 15 இடங்களுக்கு டிசம்பா் 5-ம் தேதி தோதல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏ க்களில் 16 பேர் இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கர்நாடக முதல்வர் எடியூரபா முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர். இவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது பாஜக மூத்த உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.