பாஸ்டன்: அமெரிக்காவில் வெளியாகும் ‘பாஸ்டன் குளோப்’ என்ற பத்திரிகையில், கொரோனா தொற்றால் பலியானவர்களுக்கான இரங்கல் செய்திகள் மட்டும் 15 பக்கங்களுக்கு இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பலி அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு மாசாசூசெட்ஸ் மாகாணத்தில், கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அந்த மாகாணத்தில் 38 ஆயிரம் பேருக்கு தொற்று உள்ளது. இதுவரை 1,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு வெளியாகும் பாஸ்டன் குளோப் என்ற பத்திரிகையில், மொத்தம் 15 பக்கங்களுக்கு, கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கான இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தினர். இதுபோன்றதொரு சம்பவம் முன்பு இத்தாலியிலும் நடைபெற்றது நினைவிருக்கலாம்.