கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியானார்கள். இதைத்தொடர்பு அவசர தொடர்பு மற்றும் உதவி  எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து இந்த விபத்தில்  முதற்கட்டமாக 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில்  தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியதில், ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முற்றிலும் சீர்குலைந்தன. தொடர்ந்து ரயில் பெட்டிகள் பல தடம்புரண்டன.

இந்த  விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுள்ளனர். இந்த விபத்தில் 5 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும்  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று டார்ஜிலிங் காவல்துறையின் கூடுதல் எஸ்பி அபிஷேக் ராய் தெரிவித்துள்ளார். விபத்தில் முதல்கட்டமாக ஐந்து பயணிகள் பலியாகியுள்ளனர். 20-25 பேர் காயமடைந்துள்ளனர். சிலரின் நிலைமை மோசமாக உள்ளது.  இதனிடையே ரயில் விபத்து தொடர்பான விவரங்களை பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 13174, 03323508794, 03323833326 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்து குறித்து மம்தா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,   மேற்கு வங்கத்தில் நேரிட்ட ரயில் விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. ரயில் விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர், மருத்துவக் குழுவினரை அனுப்பி வைத்துள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டள்ளார்.

விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர் என  குறிப்பிட்டுள்ளார்.

ரயில் விபத்து – அவசர கால எண்கள் அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை ரயில்வே துறை அறிவித்துள்ளது

033-23508794, 033-23833326 என்ற அவசர கால எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு

Sealdah Station
033-23508794
033-23833326

GHY Station
03612731621
03612731622
03612731623

KIR Station
6287801805

Katihar Station
09002041952
9771441956

LMG Station
03674263958
03674263831
03674263120
03674263126
03674263858