சென்னை: அமுதம் அங்காடிகளில் ரூ.499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனையை  செய்யப்படுகிறது. இந்த விற்பைனையை  அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்

மளிகை பொருட்கள் விளையேற்றம் காரணமாக, பொதுமக்கள் பயன் அடையும் வகையில், தமிழ்நாடு அரசு,  முதல்கட்டமாக, அமுதம் அங்காடி, அமுதம் நியாய விலைக் கடைகளில் மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில்,  அமுதம் பிளஸ் என்ற பெயரில் ரூ.499-க்கு 15 மளிகை பொருள் தொகுப்பு விற்பனை செய்யப்பட உள்ளது.

அதன்படி,   சென்னையில் அமுதம் பிளஸ் மளிகை பொருள் தொகுப்பு விற்பனையை அமைச்சர் சக்கரபாணி  இன்று காலை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள  அமுதம் பல்பொருள் அங்காடிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என  உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் பருப்பு மற்றும் தானிய வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் அமுதம் பல்பொருள் அங்காடிகளை நடத்தி வருகிறது. இந்த அமுதம் அங்காடிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், கூடுதலாக 100 அமுதம் துறைசார் பல்பொருள் அங்காடியை திறப்பதற்கு தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, கடந்த 2016ம் ஆண்டு 25 மாவட்டங்களில் 54 அமுதம் துறைசார் பல்பொருள் அங்காடி திறக்கப்பட்டது. எஞ்சிய 46 அமுதம் பல்பொருள் அங்காடியை திறப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக 20 அமுதம் பல்பொருள் அங்காடிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்பட உள்ளன. எஞ்சிய 26 அமுதம் பல்பொருள் அங்காடிகளும் விரைவில் திறக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 100 அமுதம் பல்பொருள் அங்காடிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.