மும்பை

மும்பை உயர்நீதிமன்றம் சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாட்கள் ஐறை தண்டனை விதித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பியாண்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் வரம்பிற்குட்பட்ட பொது கழிப்பறைகளை கட்டுவது மற்றும் பராமரிப்பது தொடர்பாக 100 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியிருந்தார்.  இதையொட்டி பாஜக தலைவர் கிரித் சவுமியா மனைவி டாக்டர் கிரித் மேத்தா என்பவர் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

சஞ்சய் ராவத் தன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாத முற்றிலும் அவதூறான வகையில், தனக்கும் தனது கணவருக்கும் எதிராக பேசியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த அவதூறு வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட் து. தீர்ப்பில் சஞ்சய் ராவத்திற்கு 15 நாள் சிறை தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.