பெங்களூரு:

சமையலறையை அசுத்தமாக வைத்திருந்த உணவகங்களின் லைசன்ஸை பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் ரத்து செய்தனர்.


கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 8 மண்டலங்களில் உள்ள உணவகங்களில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சுகாரமற்ற நிலையில் சமையலறையை வைத்திருந்த 15 உணவகங்களின் லைசன்ஸை ரத்து செய்தனர்.

சமைத்தபின் பாத்திரங்களை திறந்தவெளியில் போட்டிருந்ததாகவும், அந்த இடத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமையலறை அசுத்தமாக இருந்ததாகவும், கழிவுகள் காய்ந்து கிடந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இது போன்று சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 20 உணவகங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கடந்த 2016 முதல் உணவக சமையலறையில் சிசிடிவி கேமிரா வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மீறிய உணவகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.