சென்னை: தடய அறிவியல் துறைக்கு 14 நடமாடும் ஆய்வக வாகனங்கள் கொண்ட வாகனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின்சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தடயவியல் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.