மும்பை: இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருநாள் தொடர், வரும் 23ம் தேதி(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இங்கிலாந்து அணி, ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களை இழந்துவிட்டது. இந்நிலையில், ஒருநாள் தொடர்களையாவது வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி விபரம்

மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், ஜேஸன் ராய், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளே, அதில் ரஷித், மாட் பார்க்கின்ஸன், மார்க் உட்.

காத்திருப்பு வீரர்கள்

ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மலான்.

ஒருநாள் போட்டித் தொடருக்காக, 19 வீரர்களைக் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.