சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பால் பண்ணையில் அம்மோனியா வாயு கசிந்ததால், அங்கு பணியில் இருந்தவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
ஆந்திராவின் சித்தூர் பகுதியின் புட்டலபட்டு மண்டலத்தில் உள்ள பந்தபள்ளியி என்ற பகுதியில் பால் பண்ணை அமைந்துள்ளது. இங்குள்ள பால் குளிரூட்டும் பகுதியில் இருந்து, நேற்றுஇரவு திடீரென அமோனியா வாயு கசிந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பணியில் இருந்த 26 ஊழியர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், அவர்களை மீட்டு, திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில், 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சித்தூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் நாராயண் பாரத் குப்தா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த சிகிச்சை கொடுக்கவும், சம்பவம் குறித்து விசாரிப்பது தொடர் பாகவும் ஆந்திராவின் அமைச்சர் பெடிரெட்டி ராமச்சந்திர ரெட்டி சித்தூர் மாவட்ட ஆட்சியருடன் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.