பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சில கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பங்காலி காலன், மராரி காலன் மற்றும் ஜெயந்திபூர் ஆகிய கிராமங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன.

14 பேர் உயிரிழந்துள்ளதாக அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாஹ்னி உறுதிப்படுத்தினார். நிலைமையை மதிப்பிடுவதற்காக மூத்த காவல் கண்காணிப்பாளர் மனிந்தர் சிங் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிரப்ஜித் சிங், குல்பீர் சிங், சாஹிப் சிங், குர்ஜந்த் சிங் மற்றும் நிந்தர் கவுர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் கலால் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.