சென்னை: தமிழகத்தில் நேற்று 2,505 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 160 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள்.

தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று இரவு வெளியிட்ட தகவலின்படி, மாநிலம் முழுவதும் நேற்று  2,505 பேர் புதியதாக கொரோனாவால் பபாதிகக்ப்பட்டு உள்ளனதாகவும், இதனால், இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  25,23,943 பேர் ஆக அதிகரித்துள்ளது என கூறியுள்ளது.

நேற்று ஒரே நாளில்  48 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,502 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில், நேற்று 3,058 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,59,223 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றுக்காக  31,218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநில தலைநகர்   சென்னையில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ருப்பதுடன்,   இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  5,35,439 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில்  நேற்று ஒரே நாளில் மேலும் 264 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,25,523 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 5 பேர் உயிர் இழந்துள்ளதன் மூலம்  இதுவரை 8,267 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,649 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக விவரம்:

[youtube-feed feed=1]