ramkund
மராட்டியத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. வறட்சியின் காரணமாக கோதாவரி ஆற்றில் இருந்து ராம்குந்த் குளத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் அடியோடு நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த குளம் வறண்டுபோய், பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
ஏறத்தாழ 139 ஆண்டுகளுக்கு பின்னர் ராம்குந்த் வளம் வறண்டுபோய் காட்சியளிக்கிறது. இந்த நிலையில், நேற்று மராட்டியர்களின் புத்தாண்டு தினமான ‘குடிபட்வா’வையொட்டி திரளான பொதுமக்கள், அங்கு புனித நீர் ஆடுவதற்காக திரண்டனர். எனினும், அங்கு காணப்பட்ட காட்சி அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.