டெல்லி

மூன்றாம் கட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 1351 பேர் போட்டியிடுகின்றனர். 

கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. வரும் 26 ஆம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே 7 ஆம் தேதி 3-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அன்று குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

நேற்றுடன் இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனு வாபஸ் முடிந்தது. இதில் 96 இடங்களுக்குப் போட்டியிட 2 ஆயிரத்து 963 பேர் மனு செய்து இருந்தனர்.இதில் வேட்பு மனு பரிசீலனைக்குப் பின்பு 1,563 மனுக்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டு வேட்புமனு திரும்பப் பெறப்பட்ட பின்பு, இறுதி வேட்பாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

அதன்படி 3 ஆம் கட்ட தேர்தலில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.

இவர்களில் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் அடக்கம். அங்கு 2 ஆம் கட்டத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் இறந்துபோனதால், அந்த தொகுதிக்கு 3-ம் கட்ட தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

இதில் அதிகபட்சமாகக் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கு 658 பேர், மற்றும் மகாராஷ்டிராவில் 11 இடங்களுக்கு 519 பேர், உஸ்மான்பாத் தொகுதியில் அதிகபட்சமாக 77 பேர் போட்டியிடுகிறார்கள். அடுத்தபடியாக சத்தீஷ்கரின் பிலாஸ்பூர் தொகுதியில் 68 பேர் போட்டியிடுகிறார்கள்.